எவ்வாறு கண்டறிவது
சந்தேகம் ஏற்பட்டால் மருத்துவருடன் பேசுங்கள்.
பாலையும் பாற் பொருட்களையும் சில தினங்களுக்கு முற்றாகத் தவிர்ப்பதன் மூலம் ஒரு இப் பிரச்சனை இருக்கிறதா இல்லையா என தீர்மானிக்க முடியும். ஆனால் இதில் ஒரு பிரச்சனை உண்டு. பாலை ஒருவர் பாலாகக் குடிக்காவிட்டால் கூட வேறு உணவுப் பண்டங்களில் அவை மறைவாகக் கலந்திருப்பதால் அறிகுறிகள் தோன்றலாம்.
உதாரணமாக கேக், பிஸ்கற், பான்கேக், குக்கீஸ் போன்றவற்றில் கலந்திருக்கலாம். காலையில் பலர் உட்கொள்ளும் Cereal உணவுகளில் கலந்திருக்கும்.
சொக்ளட், சலட் (salad dressings) போன்றவற்றிலும் இருக்கக் கூடும். இவ்வாறு பல உணவுகளிலும் பால் அல்லது பாற்பொருட்கள் கலந்திருப்பதால் பாலைத் தவிர்க்கும் உணவுமுறை (elimination diet) சில வேளைகளில் தவறான முடிவைக் கொடுக்கக் கூடும்.

No comments :
Post a Comment